மணிப்பூரில் அமைதி திரும்ப தீர்மானம் நிறைவேற்றம்...!

Update: 2023-08-09 05:23 GMT
Live Updates - Page 2
2023-08-09 07:05 GMT

மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கருதவில்லை - ராகுல்காந்தி

கடந்த சில நாட்களுக்கு முன் நான் மணிப்பூர் சென்றேன். ஆனால், இன்று வரை நமது பிரதமர் அங்கு செல்லவில்லை, ஏனென்றால் பிரதமரை பொருத்தவரை அவர் மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதவில்லை என ராகுல்காந்தி கூறினார்.

2023-08-09 06:59 GMT

பாஜக எம்.பி.க்கள் பயப்பட வேண்டாம் - ராகுல்காந்தி அதிரடி

என் எம்.பி. பதவி நீக்கத்தை ரத்து செய்ததற்கு சபாநாயகருக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் கடந்த முறை பேசும்போது அதானி குறித்து பேசி உங்களுக்கு (சபாநாயகர் ஓம்பிர்லா) நிறைய தொந்தரவு கொடுத்துவிட்டேன். உங்கள் மூத்த தலைவர்களுக்கு அது வலியை ஏற்படுத்தி இருக்கலாம். அந்த வலி உங்களையும் பாதித்திருக்கலாம்.அந்த பாதிப்பிற்காக உங்களிடம் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். ஆனால், நான் உண்மையை பேசினேன். பாஜகவில் உள்ள எனது நண்பர்கள் இன்று என் பேச்சைக்கேட்டு பயப்பட வேண்டாம். எனென்றால் இன்று என் பேச்சு அதானி குறித்து அல்ல’ என ராகுல்காந்தி கூறினார். 

2023-08-09 06:50 GMT

என் எம்.பி. பதவி நீக்க உத்தரவை திரும்பப்பெற்றதற்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என ராகுல்காந்தி கூறினார்.

2023-08-09 06:45 GMT

அச்சம் வேண்டாம்.... அதானி குறித்து பேசமாட்டேன் - நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி உரையை தொடங்கினார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பேசி வருகிறார். அவர் கூறுகையில், அச்சம் வேண்டாம்.... அதானி குறித்து பேசமாட்டேன்  நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி உரையை தொடங்கினார்.

2023-08-09 06:31 GMT

ராகுல்காந்தி நாடாளுமன்றம் வருகை

மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 2வது நாளாக இன்றும் நடைபெற் உள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றம் வருகை தந்துள்ளார்.


 

2023-08-09 05:56 GMT

மாநிலங்களவை ஒத்திவைப்பு...!

எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2023-08-09 05:52 GMT

எம்.பி.க்கள் மவுன அஞ்சலி

1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூரும் வகையில், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்களவை எம்.பி.க்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். ஜப்பானின் நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டு உயிரிழந்தவர்களின் 78வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் மக்களவையில் எம்.பி.க்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

2023-08-09 05:42 GMT

2வது நாள் விவாதம்: ராகுல் காந்தி, அமித்ஷா இன்று பேசுகிறார்கள்

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பேச்சை தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ராகுல் காந்தி நேற்று பேசவில்லை.

காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் பேச்சை தொடங்கினார். தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு போன்றோரும் பேசினர். இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி மக்களவையில் பேசுவார் என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பேசுகிறார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். அதேவேளையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று வாக்கெடுப்பிற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

2023-08-09 05:32 GMT

நாடாளுமன்றம் கூடியது...!

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின

2023-08-09 05:32 GMT

நம்பிக்கையில்லா தீர்மானம்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மேலும், மணிப்பூர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட மக்களவை சபாநாயகர் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தவும் ஒப்புக்கொண்டார்.

அதன்படி, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தொடங்கியது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளும் பாஜக எம்.பி.க்கள் பதில் அளித்தனர்.

இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் 2வது நாளாக இன்றும் விவாதம் நடைபெற உள்ளது. மக்களவை 11 மணிக்கு கூட உள்ள நிலையில் கேள்வி நேரத்திற்கு பின் மதியம் 12 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியும் பேசுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்