மராட்டியம்: வொர்லி பகுதியில் உள்ள பூனம் சேம்பரில் தீ விபத்து
மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள பூனம் சேம்பர்ஸில் இன்று(15.12.2024) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள பூனம் சேம்பர்ஸில் இன்று(15.12.2024) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பனியில் ஈடுபட்டனர்.
இது குறித்து மும்பை தீயணைப்பு படை அதிகாரி கூறுகையில்,
மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள பூனம் சேம்பர்ஸில் இன்று காலை 11.39 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்கு அழைப்பு வந்தது. வோர்லி பகுதியில் உள்ள ஏழு மாடி வர்த்தக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
வெகு நேர போராட்டத்திற்கு பிறகு தீயை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.
மேலும் இந்த தீ விபத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தீ விபத்தில் வேறு யாரும் காயமடையவில்லை என கூறினார்.