16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - வாலிபர் கைது

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-01-16 08:18 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலாம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே சுங்கப்பாரா பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்வின் (வயது 26). இவர் 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இதுகுறித்து பெற்றோர் திருவல்லா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை ஜெஸ்வின் ஒரு பூங்காவில் வைத்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருவல்லா அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவள் 6 வாரம் கர்ப்பமாக இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை திருவல்லா கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் சிறுமியின் எதிர்காலம், மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்ய கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன் பேரில் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. அதன் டி.என்.ஏ. மாதிரியை போலீசார் சேகரித்து உள்ளனர். அதோடு ஜெஸ்வினிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்