பாதுகாப்பு துறை ஏற்றுமதி; டாப் 25 நாடுகளில் இந்தியாவும் ஒன்று: ராஜ்நாத் சிங் பேச்சு

பாதுகாப்பு துறையில் ஏற்றுமதி செய்யும் டாப் 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Update: 2022-05-20 16:24 GMT

புதுடெல்லி,

மராட்டியத்தின் புனே நகரில் நடந்த கூட்டமொன்றில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பா.ஜ.க. தொண்டர்களிடையே இன்று பேசினார். அவர் கூறும்போது, நம்முடைய நாடு பாதுகாப்பு துறையில் மிக பெரிய இறக்குமதியாளராக முன்பு இருந்து வந்தது.

ஆனால், பாதுகாப்பு துறையில் ஏற்றுமதி செய்யும் டாப் 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என கூறியுள்ளார்.

பாதுகாப்பு துறைக்கான ஆயுதங்கள் வெளியில் இருந்தே வாங்கப்பட்டு வந்தன. இந்தியாவில் எதுவும் கட்டப்படவில்லை. பீரங்கிகள், ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் என அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டன என அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், 309 பொருட்களின் பட்டியலை நான் தயார் செய்துள்ளேன். அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு பிற நாடுகளிடம் இருந்து வாங்கப்படாது. அவற்றை தயாரிக்கும் நடைமுறைகள் முன்பே தொடங்கி விட்டன.

இந்தியா உலக அளவில் இன்று மதிக்கப்படுகிறது. தற்போது நாங்கள் மதிக்கப்படுகிறோம் என உணர்வதாக பிற நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் என்னிடம் கூறினார்கள்.

இதற்கு முன்பு சர்வதேச மாநாடுகளில், இந்தியர்கள் ஏதேனும் கூறினால், அதனை ஒருவரும் கேட்க கூடமாட்டார்கள். தற்போது, ஒட்டு மொத்த உலகமும் கவனமுடன் கேட்கிறது என சிங் கூறியுள்ளார்.

உலகின் மிக பெரிய கட்சியான பா.ஜ.க., ஆட்சியமைப்பதற்காக அரசியல் செய்வதுடன் நில்லாமல், நாட்டை உருவாக்கவும் அரசியல் செய்து வருகிறது என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்