டெல்லியில் ஜே.என்.1 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி டிஸ்சார்ஜ் - புதிய பாதிப்புகள் இல்லை என தகவல்

புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சவுரப் பரத்வாஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Update: 2023-12-28 16:53 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படடதாக டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சவுரப் பரத்வாஜ் தெரிவித்திருந்தார்.

இதனிடையே நாடு முழுவதும் கடந்த 26-ந்தேதி வரையிலான நிலவரப்படி, ஜே.என்.1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்ததாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் டெல்லியில் ஜே.என்.1 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, டெல்லியில் புதிதாக ஜே.என்.1 பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சவுரப் பரத்வாஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்