கர்நாடகத்தில் ஊழல் தாண்டவம் ஆடுகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் ஊழல் தாண்டவம் ஆடுகிறது என்று சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-09-19 02:59 GMT

மைசூரு,

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மைசூரில் பேசியதாவது:-

நாட்டில் பா.ஜனதா அரசால் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடியாத நிலைமை இருக்கிறது. பா.ஜனதா அரசு சாதி, மதம் இடையேயான இணைப்பை உடைக்கும் வேலை செய்து கொண்டிருக்கிறது.

ஊழல் செய்ய விடமாட்டேன், அவை நடக்காதபடி காவல் நிற்பேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். தற்போது பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார். கர்நாடகத்தில் ஊழல் தாண்டவம் ஆடுகிறது.

என்னுடைய 40 ஆண்டுகால அரசியலில் இதுபோன்ற ஊழல் அரசை பார்க்கவில்லை. நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது. பட்டதாரிகள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்