3 மாநிலங்களில் முதல்-மந்திரிகளை நியமிக்காதது ஏன்? பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி

சத்தீஷ்கார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கான முதல்-மந்திரிகளை கூட பாஜகவால் அறிவிக்க முடியவில்லை.

Update: 2023-12-07 12:09 GMT

புதுடெல்லி,

5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. 3 மாநிலத்தில் பெற்ற வெற்றியால் பாஜகவுக்கு ஊக்கமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தநிலையில், சமீபத்திய நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் இதுவரை முதல்-மந்திரிகளை அறிவிக்காதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பதிவில்,

டிசம்பர் 3-ம் தேதி பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. முதல்-மந்திரிகள் நியமிப்பதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்களில் அனைவராலும் விமர்சிக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும் மூன்று நாட்கள் கடந்தும், சத்தீஷ்கார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கான முதல்-மந்திரிகளை கூட பாஜகவால் அறிவிக்க முடியவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தெலுங்கானாவின் ஒருநாள் முன்னதாகவே முதல்-மந்திரியாக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் 1 மணிக்குப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் பாஜக அலையை எதிர்கொண்ட காங்கிரசுக்கு சற்று ஆறுதலாக, தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியை  அகற்றி ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்