சகோதர-சகோதரி இருவரின் கட்சியாக காங்கிரஸ் சுருங்கிவிட்டது- ஜே.பி. நட்டா விமர்சனம்
காங்கிரஸ் சகோதர-சகோதரி இருவரின் கட்சியாக சுருங்கிவிட்டதாக ஜே.பி. நட்டா விமர்சித்தார்
புவனேஸ்வர்,
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இரண்டு நாள் பயணமாக ஒடிசா சென்றுள்ளார். பிஜு பட் நாயக் சர்வதேச விமான நிலையத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், பாஜக மாநிலத் தலைவர் சமீர் மொஹந்தி மற்றும் கட்சியின் தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா ஆகியோர் ஜேபி நட்டாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் புவனேஸ்வரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் ஜேபி நட்டா, காங்கிரஸ் சகோதர-சகோதரி இருவரின் கட்சியாக சுருங்கிவிட்டதாக விமர்சித்தார். காங்கிரஸ் இனி தேசியக் கட்சி அல்ல எனவும் ஜேபி நட்டா தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து அதன் மூத்த தலைவர்கள் வெளியேறி பாஜகவில் இணைந்து வரும் சூழ்நிலையில் நட்டா இவ்வாறு பேசியுள்ளார்.