ஜெர்மனி, ஆஸ்திரேலிய தூதர்களுடன் காங்கிரஸ் தலைவர் கார்கே சந்திப்பு

ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலிய தூதர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2023-06-29 12:00 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் மற்றும் ஆஸ்திரேலிய தூதர் பேர்ரி ஓ பேரல் ஆகியோரை இன்று தனது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இதுபற்றி கார்கே டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் உடனான சந்திப்பில், பொதுவான ஜனநாயக கொள்கைகள் அடிப்படையில் உருவான மற்றும் நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றால் குறிக்கப்பட்ட இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகள் இடையேயான செயல்திட்ட உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது என தெரிவித்து உள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இந்தியாவின் மிக பெரிய வர்த்தக நாடாக ஜெர்மனி உள்ளது. இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக்கான பெரிய வளம் கொண்ட நாடாகவும் அந்நாடு உள்ளது.

இதேபோன்று, கார்கேவை அவரது இல்லத்தில் வைத்து ஆஸ்திரேலிய தூதர் பேர்ரி ஓ பேரல் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், இரு நாடுகள் இடையேயான உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன என்று கார்கே டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

பேரல் இந்திய தூதர் பதவியில் இருந்து விலகி செல்லவுள்ள நிலையில், இந்தியாவுக்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதராக பிலிப் கிரீன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்