தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து திரிபுராவில் காங்கிரஸ், பாஜக ஆதரவாளர்கள் மோதல்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அரைமணி நேரத்தில் திரிபுராவில் காங்கிரஸ், பாஜக ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2023-01-18 13:56 GMT

கவுகாத்தி,

திரிபுராவின் மஜ்லிஷ்பூரில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்த அரை மணி நேரத்தில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

மஜ்லிஷ்பூர் தொகுதியில் உள்ள ராணிர்பஜார் மோகன்பூரில் நடந்த இந்த மோதலில் காங்கிரஸ் தலைவர் டாக்டர் அஜய் குமார் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.

காங்கிரஸ் எம்எல்ஏ சுதீப் ராய் பர்மன், காயமடைந்த கட்சித் தொண்டர்கள் பலர் இன்னும் ராணிர்பஜார் காவல் நிலையத்தில் இருப்பதாக கூறியுள்ளார். அந்த பகுதியில் பாஜகவினர் ஏராளமானோர் இருப்பதால் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படவில்லை என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதலுக்கு ஒரு அமைச்சர் தலைமை தாங்குகிறார் என்று குற்றம் சாட்டிய அவர், இன்று சம்பவம் நடந்த மஜ்லிஷ்பூர் தொகுதி உட்பட ஐந்து தொகுதிகளில் தேர்தல் ஆணையம் தனித்தனியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரினார்.

திரிபுரா சட்டப்பேரவைக்கு வருகிற பிப்ரவரி 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வருகிற மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்