கால்நடைத்துறையில் கோமாதா கூட்டுறவு சங்கம் தொடக்கம்; மந்திரி பிரபுசவான் தகவல்

கால்நடைத்துறையில் கோமாதா கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட உள்ளதாக மந்திரி பிரபுசவான் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-12 20:17 GMT

பெங்களூரு:

கர்நாடக கால்நடைத்துறை சார்பில் கோமாதா கூட்டுறவு சங்கத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. அத்துறை மந்திரி பிரபுசவான் தலைமையில் இந்த கூட்டத்தில் கால்நடைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மந்திரி பிரபுசவான் பேசியதாவது:-

பசு மாடுகளின் கோமியம் மற்றும் சாணத்தில் இருந்து சோப்பு, சேம்பு, அலங்கார பொருட்கள் என பல்வேறு வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு நமது மாநிலத்தில் உள்ள கோசாலைகளே சாட்சி. இத்தகைய பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டத்திற்கு ஒரு கோசாலை அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் கோசாலைகளில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன் அவற்றின் கழிவுகளில் இருந்து துணை பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்த பொருட்களை விற்பனை செய்ய சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தில் கோமாதா கூட்டுறவு சங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரபுசவான் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்