சத்தீஸ்கரில் டிரக் மீது வேன் மோதி பயங்கர விபத்து - 11 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் டிரக் மீது வேன் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-02-24 04:24 GMT

பட்டாபரா,

சத்தீஸ்கர் மாநிலம் பலோடபஜார்-பட்டாபரா மாவட்டத்தில் உள்ள பட்டாபரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கமாரியா கிராமத்திற்கு அருகே டிரக் மீது பிக்-அப் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். நேற்று இரவு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கியவர்கள் சிம்கா பகுதியில் உள்ள கிலோரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அர்ஜூனி பகுதியில் ஒரு குடும்ப விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில், காயமடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்