கோடை வெயில் பாதிப்பு தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
பணி நேரத்தை மாற்றியமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
வெயில் அதிகரிப்பதால் பணி நேரத்தை மாற்றியமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அஹூஜா எழுதியுள்ள கடிதத்தில் ,
பணியிடங்களில் போதிய குடிநீர் , காற்றோட்டம் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பணி நேரத்தை மாற்றியமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். உடல்நிலை சரியில்லாத ஊழியர்களுக்கு வேலை பளு அதிகம் வழங்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.என கூறப்பட்டுள்ளது