நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது

நீட் விலக்கு – நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார்.

Update: 2024-01-02 09:11 GMT

புதுடெல்லி,

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி 'நீட் விலக்கு – நம் இலக்கு' என்ற கையெழுத்து இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் கையெழுத்துகளை, 50 நாட்களில் பெற வேண்டும் என்பது இதன் குறிக்கோளாக இருந்த நிலையில், திட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் வாங்கப்பட்டுள்ள 50 லட்சம் கையெழுத்துக்களை விரைவில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், நீட் கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பின்னர் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட விரும்பவில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்