முலாயம் சிங் மறைவால் காலியான மெயின்புரி மக்களவை தொகுதியில் இன்று இடைத்தேர்தல்

சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உத்தரபிரதேசத்தின் மெயின்புரி மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.

Update: 2022-12-04 21:38 GMT

புதுெடல்லி, 

சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உத்தரபிரதேசத்தின் மெயின்புரி மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் அவர் மறைந்ததால், அந்த தொகுதி காலியாக இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் முலாயமின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் சமாஜ்வாடி சார்பில் ேபாட்டியிடுகிறார். அங்கு சமாஜ்வாடி மற்றும் பா.ஜனதா இடையே கடும் ேபாட்டி ஏற்பட்டு உள்ளது.

இதைப்போல நாட்டின் 5 மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் காலியாக உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் ராம்பூர் சதர் மற்றும் கதாலி, ஒடிசாவின் பதம்பூர், ராஜஸ்தானின் சர்தார்ஷாகர், பீகாரின் குரானி, சத்தீஸ்காரின் பனுபிரதாப்பர் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு உள்ளது. இந்த தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கையும் வருகிற 8-ந்தேதி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்