தொழிலாளி மீது சிறுநீர் கழித்த நபரின் வீடு புல்டோசர் கொண்டு இடிப்பு

பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த நபர் பாஜகவை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-07-05 20:37 GMT

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளியான தேஷ்பத் ரவத் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார்.

புகைபிடித்தவாறு அந்த தொழிலாளி மீது தேஷ்பத் ரவத் சிறுநீர் கழிக்கும் கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர். மேலும், அவரு பாஜகவை சேர்ந்தவர் என்பதும் அவருக்கு பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லா மற்றும் பிற பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பர்வேஷ் சுக்லா தலைமறைவான நிலையில் அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் குற்றவாளி மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாயும் என மத்தியபிரதேச முதல்-மந்திரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லாவை போலீசார் நேற்று கைது செய்தனர். பர்வேஷ் சுக்லா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரின் வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் நேற்று புல்டோசர் கொண்டு இடித்தனர்.

ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி பர்வேஷ் சுக்லாவின் வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் நேற்று இடித்தனர். அதேவேளை, தன் மீது சிறுநீர் கழித்த வீடியோ போலியானது என கூறக்கோரியும், எழுத்துப்பூர்வமாக தன்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றதாக பாதிக்கப்பட்ட தொழிலாளி தேஷ்பத் ரவத் போலீசார் மீது குற்றஞ்சாட்டியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்