பா.ஜனதாவின் சுற்றுப்பயணம் பொய் பயணம் - சித்தராமையா விமர்சனம்

பா.ஜனதாவின் சுற்றுப்பயணம் பொய் பயணம் என்று கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

Update: 2022-10-14 01:59 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியதாவது:-

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பா ஆகியோரின் சுற்றுப்பயணத்தில் என்னை குறியாக வைத்து விமர்சனம் செய்கிறார்கள். எது பேசுவதாக இருந்தாலும், புள்ளி விவரங்களை வைத்து கொண்டு பேசினால் அதற்கு மதிப்பு கிடைக்கும். ஆனால் எந்த புள்ளி விவரமும் இல்லாமல் வெறுமனே குற்றம்சாட்டுவதை கர்நாடக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

பா.ஜனதாவினரின் சாதனை திட்டங்களின் பெயரை மாற்றுவது மட்டுமே. பொய் பேசுவதையே மட்டுமே பா.ஜனதாவினர் வேலையாக கொண்டு செயல்படுகிறார்கள்.

பா.ஜனதாவின் சுற்றுப்பயணம் பொய் பயணம் என்று மக்களுக்கு நன்றாக புரிந்துள்ளது. தேர்தல் எப்போது வரும் என்று மக்கள் எதிர்பாா்த்து காத்திருக்கிறார்கள். இது பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பாவுக்கு புரிந்தால் நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்