மக்களவைத்தேர்தல் - பா.ஜ.க. 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அரியானா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் கர்னால் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Update: 2024-03-13 13:46 GMT

புதுடெல்லி,

மக்களவைத்தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

முக்கிய வேட்பாளர்கள் யார்...யார்?

* அரியானா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் கர்னால் தொகுதியில் போட்டியிடுகிறார்.

* கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா ஷிமோகா தொகுதியில் போட்டியிடுகிறார்.

* பா.ஜ.க. இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கில் போட்டியிடுகிறார்.

* நாக்பூர் தொகுதியில் மத்திய மந்திரி நிதின் கட்கரி போட்டியிடுகிறார்.

* மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கர்நாடகாவின் தர்வாட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

* மத்திய மந்திரி பியூஷ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

* மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர் இமாச்சலில் உள்ள ஹமீர்புர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

* கர்நாடக மாநிலம் ஹவேரி தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை களமிறக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா, மராட்டியம், குஜராத், பீகார், ம.பி. உள்ளிட்ட மாநிலங்களுக்கான பா.ஜ.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க. வெளியிட்டுள்ள 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலிலும் தமிழக வேட்பாளர்கள் பெயர் இடம்பெறவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 195 பேர் கொண்ட முதல் பட்டியலிலும் தமிழக பா.ஜ.கவினர் பெயர் இடம்பெறவில்லை.


Tags:    

மேலும் செய்திகள்