மும்பை-புனே விரைவு சாலையுடன் கடல்வழி மேம்பாலத்தை இணைக்க திட்டம்

மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையுடன் கடல்வழி மேம்பாலத்தை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Update: 2023-03-11 22:15 GMT

டிரான்ஸ் ஹார்பர் கடல்வழி மேம்பாலம்

மும்பை சிவ்ரியில் இருந்து நவிமும்பை உரண் பகுதிக்கு டிரான்ஸ் ஹார்பார் கடல்வழி மேம்பாலம் சுமார் 21.8 கி.மீ தொலைவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் 93 சதவீதம் நிறைவு பெற்று உள்ளது. டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு பணி முடிவடைந்த பின்னர் இதனை மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையுடன் இணைக்க ஆய்வு பணி தொடங்கப்பட உள்ளது.

ரூ.1.352 கோடி செலவு

இது பற்றி எம்.டி.எச்.எல் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முதற்கட்டமாக பன்வெல் கோன் கிராமத்தில் இருந்து ஜவகர்லால் துறைமுகம் வெளியேறும் இடம் வரை உல்வே வழியாக சுமார் 7.35 கி.மீ தொலைவில் உயரமான பாலம் அமைக்க வேண்டும். இதன்பின்னர் தேசிய நெடுஞ்சாலை 348 மற்றும் 48 இடையே சாலை இணைப்பு பணி நடைபெறும். இதனை கட்டி முடிக்க 30 மாதங்கள் ஆகும்.

இந்த திட்டத்திற்காக ஆகும் மொத்த செலவு ரூ.ஆயிரத்து 352 கோடி என கணிக்கப்பட்டு உள்ளது. கடல்வழி மேம்பாலத்தை மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையுடன் இணைத்தால் தென்மும்பையில் இருந்து லோனாவாலா வரையில் குறைந்த நேரத்தில் புனே செல்ல முடியும். 1 மணி பயண நேரம் மிச்சமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்