மும்பை-புனே விரைவுச்சாலை அருகே சாக்கு பையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு

சமீபத்தில் ஏதேனும் பெண் காணாமல் போனதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2024-11-26 17:54 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை-புனே விரைவுச்சாலை அருகே அடையாளம் தெரியாத பெண்ணின் உடல், இரண்டு சாக்கு பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

விரைவுச்சாலையில் உள்ள ஷிர்கான் பாடா பகுதியை தூய்மைத் தொழிலாளர்கள் சுத்தம் செய்யும்போது சாக்கு பை இருப்பதை கண்டுள்ளனர். இதையடுத்து அதைத் திறந்துபார்த்தபோது பையில் ஒரு உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாக்கு பையை திறந்துபார்த்தபோது அதில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல், இரண்டு சாக்குகளில் அடைக்கப்பட்டு, அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள புதர்களில் வீசப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அதை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட தகவல்களின்படி, பெண் இரண்டு நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் உடல் சிதைவடையத் தொடங்கியிருப்பதாகவும் இறந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறியச் சம்பவ இடத்தில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் ஏதேனும் பெண் காணாமல் போனதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்