காவல் நிலையத்தில் பணியின்போது மது குடித்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
காவல் நிலையத்தில் பணியின்போது மது குடித்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.;
பாட்னா,
பீகார் மாநிலத்தில் 2016ம் ஆண்டு முதல் பூரண மது விலக்கு அமலில் உள்ளது. இதனிடையே, அம்மாநிலத்தின் ஜெகனாபாத் மாவட்டம் சிகரியா நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பகிரா பிரசாத். இவர் கடந்த சில நாட்களுக்குமுன் பணியின்போது காவல்நிலையத்தில் வைத்து மது குடித்தார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இன்ஸ்பெக்டர் பகிரா பிரசாத் காவல்நிலையத்தில் பணியின்போது மது குடித்தது உறுதியானது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பிரசாத் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.