சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி பயப்படுகிறார் - மல்லிகார்ஜுன கார்கே
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி பயப்படுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.;
டெல்லி,
இந்திய அரசியல் சாசன தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள டாக்கட்ரா அரங்கில் காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். நிகழ்ச்சியில் கார்கே பேசியதாவது,
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி பயப்படுகிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஒவ்வொருவரும் அவர்களது பங்கை கேட்டுவிடுவார்கள் என்று பிரதமர் மோடி பயப்படுகிறார்.
நாட்டை ஒன்றிணைக்க வேண்டுமென பாஜக விரும்பினால் முதலில் வெறுப்பை பரப்புவதை நிறுத்த வேண்டும்.
மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் நடைபெறும் தேர்தல் எங்களுக்கு வேண்டாம். வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவரக்கோரி பாரத் ஜோடோ யாத்திரை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது' என்றார்.