புதுச்சேரியில் விற்பனைக்கு வந்த செங்கரும்பு - கட்டு விலை ரூ.800

20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.700 முதல் ரூ.800 வரை உழவர்சந்தை பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது.;

Update: 2025-01-04 17:13 GMT

புதுவை

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் செங்கரும்பு கட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளது.

புதுச்சேரிக்கு ஆண்டுதோறும் கரும்புகள் தமிழக பகுதியான சேத்தியாதோப்பு, சிதம்பரம், குள்ளஞ்சாவடி, புவனகிரி பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வரும். இந்த ஆண்டும் கரும்புகள் விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளது. தற்போது உழவர் சந்தைகளில் விவசாயிகளால் கரும்பு கட்டுகள் வந்துள்ளன.

20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.700 முதல் ரூ.800 வரை உழவர்சந்தை பகுதியில் தற்போது விற்பனையாகி வருகிறது. பொங்கல் சீர் செய்பவர்கள் தற்போது இந்த கரும்புகளை வாங்கி செல்கின்றனர். பெஞ்சல் புயல் காரணமாக கரும்புகள் வீணாகி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வரும் நாட்களில் கரும்பின் விலை உயரும் என்று கரும்பு வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்