சிக்கிமில் திடீரென இடிந்த பாலம்.. ஆற்றில் கவிழாமல் தப்பிய லாரி
அதிக பாரம் ஏற்றப்பட்ட சரக்கு லாரி ஒன்று பாலத்தில் சென்றபோது பாலம் திடீரென இடிந்தது.;
காங்டாக்,
சிக்கிம் மாநிலத்தின் வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் லாச்சுங் சூ ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது. பெய்லி என்று அழைக்கபடும் இந்த பாலம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான முக்கிய பாலமாக இது விளங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை அதிக பாரம் ஏற்றப்பட்ட சரக்கு லாரி ஒன்று இந்த பாலத்தில் சென்றபோது பாலம் திடீரென இடிந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லாரி ஆற்றில் கவிழாமல் தப்பியது. இதனால் லாரி டிரைவர் உயிர் தப்பினார். இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.