பிரதமர் மோடியுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு

டெல்லி சென்ற முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்;

Update:2024-11-26 23:25 IST

புதுடெல்லி,

ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்திமோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அவர் இரண்டாவது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்கவுள்ளார். இந்தநிலையில் டெல்லி சென்ற முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவருடைய மனைவி கல்பனா சோரனும் உடன் இருந்தார். இந்த சந்திப்பு தொடர்பான படங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்