'அனைவரும் ஒன்றுபட்டு பாசிச சக்திகளை எதிர்த்து போராட வேண்டும்' - மல்லிகார்ஜூன கார்கே பேட்டி

அனைவரும் ஒன்றுபட்டு பாசிச சக்திகளை எதிர்த்து போராட வேண்டும் என்று மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

Update: 2022-10-20 01:21 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் முடிவு வெளியானது. புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் காங்கிரஸ் தலைவர் 26-ந்தேதி முறைப்படி ஏற்றுக்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் முடிவு வெளியானதும், மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

சுதந்திரம் அடைந்தது முதல் இந்த நாட்டின் ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி வலுப்படுத்தி உள்ளது. இன்றைக்கு ஒவ்வொரு அமைப்பும் கலைக்கப்படுகின்றன. ஜனநாயகம், ஆபத்தில் உள்ளது. நாடு முழுவதும் தேர்தல் நடத்தி காங்கிரஸ் கட்சி, ஜனநாயகத்தை வலுப்படுத்த உழைத்துள்ளது.

எனது கூட்டாளி சசி தரூருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். நான் அவரைச் சந்தித்தேன். கட்சியை முன்னோக்கி அழைத்துச்செல்வது பற்றி விவாதித்தேன். கட்சி ஊழியர்கள் சார்பில் சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவரது தலைமையின்கீழ், நாம் மத்தியில் இருமுறை ஆட்சி அமைத்தோம்.

என்னை பொறுத்தமட்டில், காங்கிரஸ் ஊழியர்கள் அனைவரும் சமம்தான். அனைவரும் ஒன்று சேர்ந்து, நாட்டின் ஜனநாயகத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள பாசிச சக்திகளை எதிர்த்து போராட வேண்டும். கட்சியில் யாரும் பெரியவர்களும் இல்லை. சிறியவர்களும் இல்லை. எல்லோரும் ஊழியர்கள்தான். எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்