ரூ.1,500 கடனை திருப்பி தராத இளைஞரை ஸ்கூட்டரில் கட்டி 2 கி.மீ. இழுத்து சென்ற அவலம்

ஒடிசாவில் பரபரப்பு நிறைந்த சாலையில் இளைஞரை ஸ்கூட்டர் ஒன்றில் கட்டி 2 கி.மீ. இழுத்து சென்ற அவலம் நடந்து உள்ளது.

Update: 2022-10-18 13:22 GMT



கட்டாக்,


ஒடிசாவின் கட்டாக் நகரில் இரு சக்கர வாகனம் ஒன்றில் இளைஞரை ஸ்கூட்டர் ஒன்றில் கட்டி 2 கி.மீ. தொலைவுக்கு இழுத்து சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது.

கட்டாக்கில் உள்ள ஷெல்டர் சக்கா என்ற பகுதியில் இருந்து மிஷன் சாலை வரையிலான பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இதுபற்றி துணை காவல் ஆணையாளர் பினாக் மிஷ்ரா கூறும்போது, அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் உதவி காவல் ஆணையாளர்களையும் விசாரிக்கும்படி உடனடியாக உத்தரவிட்டேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து, 2 பேர் அடையாளம் காணப்பட்டு, காவலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார். இதுபற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவத்துடன் தொடர்புடைய உசைன் (வயது 24) மற்றும் சோட்டு (வயது 18) என இருவரை கைது செய்து உள்ளனர்.

ஸ்கூட்டரில் கயிறால் கட்டப்பட்டு, இழுத்து செல்லப்பட்ட நபர் ஜெகன்னாத் பெஹேரா என அடையாளம் காணப்பட்டு உள்ளது. ரூ.1,500 கடனை திருப்பி தர இயலாத நிலையில், கூடுதல் காலஅவகாசம் தரும்படி பெஹேரா கேட்டுள்ளார்.

ஆனால், தங்களது ஸ்கூட்டியில் பெஹேராவை கயிறால் கட்டியதுடன், அவரது கையில் கத்தியை வைத்து, அனைவரையும் பயமுறுத்துகிறார் என காட்டுவதற்காக ஆயிரக்கணக்கான மக்களின் முன்னால் இழுத்து சென்றுள்ளனர் என துணை காவல் ஆணையாளர் மிஷ்ரா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்