ராஜஸ்தானில் மனைவியின் ஆசைக்காக... ரூ.7 கோடியில் கோவில் கட்டிய கணவர்

ராஜஸ்தானில் மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கணவர் ரூ.7 கோடி செலவில் கோவில் கட்டியுள்ளார்.

Update: 2023-02-28 14:25 GMT



ஜெய்ப்பூர்,


ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வருபவர் கேத்ரபாஷி லெங்கா. இவரது மனைவி பைஜந்தி லெங்கா. கேத்ரபாஷியின் மனைவி சிறு வயது முதல் கடவுள் சந்தோஷியின் தீவிர பக்தையாக இருந்து வந்து உள்ளார்.

அவரது விருப்பத்திற்கு ஏற்ப சந்தோஷி பெண் தெய்வம் கொண்ட கோவில் ஒன்றை கட்டுவது என கேத்ரபாஷி முடிவு செய்து உள்ளார். தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றவும், அவர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையிலும் கோவில் ஆனது 15 வருடங்களாக உருப்பெற்று உள்ளது.

இதன்படி கேத்ரபாஷி, அவரது மனைவியின் மனிதாப்பூர் கிராமத்தில் சந்தோஷி கோவிலை கட்டியுள்ளார். இதற்காக தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து 30 கலைஞர்களை அவர் வரவழைத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, கோவில் 64 அடி உயரத்தில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. கோவிலின் உள்ளே முக்கிய அறையின் நீளம் மட்டுமே 85 அடி உள்ளது. ரூ.7 கோடி செலவில் கோவில் கட்டப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்