அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2023-06-06 03:49 GMT

புதுடெல்லி,

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 9-ந் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் இன்று வெப்பநிலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டல மண்டலமானது மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த 3 நாட்களுக்குள் கேரளா, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஒரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்