வெளிநாட்டு சிறைகளில் 8,437 இந்தியர்கள் தவிப்பு மத்திய அரசு தகவல்

தற்போது வெளிநாட்டு சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகள் உள்ளிட்ட இந்திய கைதிகளின் மொத்த எண்ணிக்கை 8,437.

Update: 2023-03-24 22:15 GMT

புதுடெல்லி, 

வெளிநாட்டு சிறைகளில் கைதிகளாக உள்ள இந்தியர்கள் பற்றி முழு விவரங்களை கேரள எம்.பி., அப்துஸ்சமது சமதனி மக்களவையில் கேட்டு இருந்தார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் நேற்று பதில் அளித்தார். எழுத்துப்பூர்வமான அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அமைச்சகத்திடம் உள்ள தகவல்களின்படி, தற்போது வெளிநாட்டு சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகள் உள்ளிட்ட இந்திய கைதிகளின் மொத்த எண்ணிக்கை 8,437.

பல நாடுகளில் நடைமுறையில் உள்ள வலுவான தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக, சம்பந்தப்பட்ட நபர் தனது தகவலை வெளிப்படுத்த சம்மதித்தால் தவிர, கைதிகள் பற்றிய தகவல்களைப் பகிர்வதில்லை. தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் கூட, சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினர் பற்றிய விரிவான தகவல்களை பொதுவாக வழங்குவதில்லை. இந்திய மாநிலங்கள் வாரியான கைதிகள் தரவு கிடைக்கவில்லை.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்