78-வது சுதந்திர தினம் - ராகுல் காந்தி வாழ்த்து

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-15 04:03 GMT

சென்னை,

நாட்டின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது நமது மிகப்பெரிய பாதுகாப்புக் கவசமாகும், இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்குள் பிணைக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மையைப் பேசும் திறன் மற்றும் கனவுகளை நிறைவேற்றும் நம்பிக்கை. ஜெய் ஹிந்த். என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்