கூட்டாமாக வந்த குரங்குகள் தாக்கியதில் மூதாட்டி பலி - அதிர்ச்சி சம்பவம்

கூட்டமாக வந்த 20 குரங்குகள் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-03-06 15:37 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் ராமரெட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அதிக அளவில் குரங்குகள் உள்ளன.

இந்நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த 70 வயதான மூதாட்டி சதரபொய்னா நர்சவா கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் உள்ள பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். அந்த மூதாட்டியின் மகள் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வெளியூர் சென்றுவிட்டார்.

வீட்டில் நர்சவா மூதாட்டி பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தபோது 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் வீட்டிற்குள் நுழைந்தன. அங்கு வீட்டில் இருந்த மூதாட்டியை குரங்குகள் கூட்டமாக சேர்ந்து தாக்கியுள்ளன. குரங்குகள் தாக்கியதில் மூதாட்டி படுகாயமடைந்தார்.

குரங்குகள் கூட்டமாக வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் தங்கள் வீடுகளின் கதவுகளை பூட்டி வீட்டுக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர். குரங்குகள் கடந்து செல்லும்வரை அக்கம்பக்கத்தினர் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் மூதாட்டியின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

குரங்குகள் கிராமத்தை விட்டு கடந்து சென்றதும் வீடுகளில் இருந்து வெளியே வந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு குரங்கு தாக்கியதில் மூதாட்டி நர்சவா படுகாயங்களுடன் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். குரங்குகள் தாக்கியதில் கால்கள், முதுகு, நெஞ்சு பகுதியில் படுகாயமடைந்த மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி நர்சவா கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்