தேர்தல் நடைபெறும் திரிபுராவில் ரூ.5.89 கோடி கடத்தல் பொருட்கள் சிக்கின
திரிபுராவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அகர்தலா,
60 இடங்களை கொண்ட திரிபுரா சட்டசபைக்கு வருகிற 16-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தலில் அசம்பாவித சம்பங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் ரூ.5.89 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்களும், துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சோதனையில் ரூ.17 லட்சம் ரொக்கம், வெளிநாடு மற்றும் உள்நாட்டு மதுபானங்கள், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் உள்ளிட்டவை சிக்கியதாக போலீசார் கூறினர்.