திரிபுரா சட்டமன்ற தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 32.12 சதவீத வாக்குகள் பதிவு

Update: 2023-02-16 08:13 GMT

அகர்தலா, 

திரிபுரா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. திரிபுராவில் ஆளும் பாஜக, இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி 32.12 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்