மணிப்பூரில் முதல்-மந்திரி முன்னிலையில் 31 பயங்கரவாதிகள் சரண்

முதல்-மந்திரி பிரேன் சிங் முன்னிலையில் நேற்று சரணடைந்த பயங்கரவாதிகள், ஆயுதங்களையும் ஒப்படைத்தனர்.

Update: 2022-11-17 01:59 GMT

கோப்புப்படம் 

இம்பால்,

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் முதல்-மந்திரி பிரேன் சிங் முன்னிலையில் 31 பயங்கரவாதிகள் நேற்று சரண் அடைந்தனர். பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்ததற்கு பிரேன் சிங் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் முன்பு சட்டம்-ஒழுங்கு மற்றும் பயங்கரவாத பிரச்சினை நிலவும் பகுதிகளாக கருதப்பட்டன. ஆனால் தற்போது மத்திய அரசின் முயற்சியால் இங்கு அரசியல் மாற்றத்தை காண முடிகிறது.

மணிப்பூர் முழுவதும் அமைதியான சூழலை உருவாக்க மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சரணடையும் பயங்கரவாதிகளுக்கு தேவையான மறுவாழ்வு உதவிகள் வழங்கப்படும் என்று கூறினார். முதல்-மந்திரி பிரேன் சிங் முன்னிலையில் நேற்று சரணடைந்த பயங்கரவாதிகள், ஆயுதங்களையும் ஒப்படைத்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்