திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் நாளை வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
அதன்படி மார்ச் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்கள் 24.02.2023 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் ஏழுமலையான் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்கள் நாளை மதியம் 2 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
எனவே பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tirupatibalaji.ap.gov.in/#/login அல்லது ttdevasthanam என்ற மொபைல் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த டிக்கெட்டுகள் முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு, அந்தந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.