காஷ்மீர் எல்லையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தின் உரி செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ராணுவமும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Update: 2022-08-25 21:51 GMT

ஸ்ரீநகர், 

காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தின் உரி செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ராணுவமும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மடியான் நானக் பகுதியில், எல்லைக்கு அப்பாலில் இருந்து 3 பயங்கரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவ முயன்றனர். உடனடியாக அவர்களை சுற்றி வளைத்த படையினர், சரணடையுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து முன்னேறியதுடன், படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடும் நடத்தினர். உடனடியாக படையினரும் திருப்பி தாக்குதல் நடத்தினர்.

இதில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்