கோவில் விருந்து சாப்பிட்ட 21 பேர் மயக்கம்... 3 குழந்தைகள் கவலைக்கிடம்
உத்தர பிரதேசத்தில் கோவிலில் உணவருந்திய குழந்தைகள் உட்பட 21 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாக்பத்,
உத்தர பிரதேசத்தில் கோவிலில் உணவருந்திய குழந்தைகள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தர பிரதேச மாநிலம், பாக்பத்தில் அமைந்துள்ள கோவிலில் மத சமூக விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் வழங்கப்பட்ட கிச்சடி சாப்பிட்டதில், குழந்தைகள் உட்பட 21 பேர் மயக்கம் அடைந்தனர்.
தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிச்சடி சாப்பிட்ட 21 பேருக்கும் ஃபுட் பாய்சன் (Food Poison)ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் மூன்று குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மற்றவர்கள் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.