சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக சுதான்சு தூலியா, ஜே.பி.பர்திவாலா பதவியேற்பு!
தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
புதுடெல்லி,
கவுகாத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுதான்சு தூலியா, குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
அந்த பரிந்துரையை ஏற்று சுதான்சு தூலியா, பர்திவாலா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் நீதிபதிகள் சுதான்சு தூலியா, பர்திவாலா ஆகிய இருவரும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அரங்கில் இன்று காலை தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த இரு நீதிபதிகள் பதவியேற்பின் மூலம், சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் அதன் முழு நீதிபதிகள் எண்ணிக்கையான 34-ஐ எட்டுயுள்ளது.