கோவேக்சின் பூஸ்டர் தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது - ஆய்வில் தகவல்

கோவேக்சின் பூஸ்டர் தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Update: 2022-04-10 12:22 GMT
புதுடெல்லி,

நமது நாட்டின் தடுப்பூசி திட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் பூஸ்டர் தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் நடத்திய ஆய்வில் பி1, டெல்டா, ஒமைக்ரான் ஆகியவற்றுக்கு எதிராக கோவேக்சின் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்