சிறார் நீதி சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், சிவசேனா வலியுறுத்தல்
சிறார் நீதி சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணிக்கு சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கடிதம் எழுதியுள்ளார்.
மராட்டியம்,
மத்திய அரசு சமீபத்தில் சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டத்தில் திருத்தங்களை செய்து உள்ளது. இதில் சிறார்களுக்கு எதிரான குற்றங்களில் நீதிபதியின் அனுமதியின்றி வழக்குப்பதிவு செய்ய முடியாது என கூறப்படுகிறது. இந்த சட்டத்திருத்தை திரும்ப பெற வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் சிறார்நீதி சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை திரும்பெற வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், " இந்த சட்டதிருத்தம் குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும், போதை பொருள் கடத்தும் கும்பலை பாதுகாக்கும் என்பதால், இது குழந்தைகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு பக்கம் மத்திய அரசு, 'பேட்டி பஜாவ், பேட்டி படாவ்' என கூறுகிறது. மறுபுறம் குழந்தைகளுக்கு எதிரான தீவிரமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதுவழக்குப்பதிவு செய்யாமல் இப்பதை உறுதி செய்கிறது. " என்றார்.