திருமண கொண்டாட்டத்தின் போது 12 அடி உயர ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்த மணமக்கள்.!

திருமண கொண்டாட்டத்தில் மணமக்கள் 12 அடி உயர ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-14 08:10 GMT
சத்தீஸ்கர்,

மக்களைப் பொறுத்தவரை, அவர்களின் திருமண நாள் அவர்களுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அந்த நாளை மறக்கமுடியாத நாளாக மாற்ற, அவர்கள் சுவாரஸ்யமான நிகழ்வுகளை அதில் கொண்டுவருவர். அது பெரும்பாலும் சந்தோசத்தை தந்தாலும், சில நேரங்களில் பாதகமாக முடிந்துவிடுகிறது.

அதுபோல சத்தீஸ்கரில் நடந்த திருமணம் ஒன்றில் விபரீதம் ஏற்பட்டது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த ஒரு ஜோடி  தங்களுடைய திருமண நிகழ்வின் போது மேடைக்கு மேலே 12 அடி உயரத்தில் வட்ட வடிவிலான ஊஞ்சல் ஒன்றில் நின்றுகொண்டிருந்தனர். 

ஊஞ்சலை சுற்றி கண்கவரும் வகையில் பட்டாசுகள் வெடிக்க, கீழே நடனக்கலைஞர்கள் நடனமாட, திருமண ஜோடி உற்சாகத்துடன் ஊஞ்சலில் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் முறிந்ததில், திருமண ஜோடி 12 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தனர். இதனால் மேடையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கீழே விழுந்தவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் மணமகன், மணமகள் இருவரும் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர். ஊஞ்சலை சுற்றி பட்டாசுகள் வைக்கப்பட்டதே விபத்துக்குக்காரணம் என்று கூறப்படுகிறது.

மணமக்கள் கீழே விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்