திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் நிறுத்தி வைப்பு

கொரோனா தொற்று பரவலால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-03 17:31 GMT
திருமலை, 

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஆகையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 14-ந்தேதியில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்ததும் அனைத்து ஆர்ஜித சேைவகள் மீண்டும் தொடங்கப்படும். இதுகுறித்து பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்