தொடர்ச்சியாக பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை ; வழிகாட்டுதலை வகுக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஏப்ரல் முதல் தொடர்ச்சியாக பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை வழங்குவதற்கான வழிகாட்டுதலை வகுக்குமாறு மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டது.
புதுடெல்லி
கடந்த நவமபர் மாதம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 5 நோயாளிகள் உயிர் இழந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் எஸ் ரெட்டி மற்றும் எம் ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.
தீ விபத்து குறித்து குஜராத் அரசிடம் சுப்ரீம் கோர்ட் அறிக்கை கோரியிருந்தது.
மத்திய உள்துறை செயலாளர் ஒரு கூட்டத்தை கூட்டி, இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு குறித்த வழிமுறைகளை வெளியிடுவார் என்று அமர்வுக்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதியளித்திருந்தார்.
இந்த விசாரணையின் போது இன்று நீதிபதிகள்
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் மாதந்தோறும் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் மருத்துவமனைகளில் தீ பாதுகாப்புக்கு பொறுப்பான ஒரு நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும்
ஒவ்வொரு மாதமும் பிரத்தியேக கொரோனா பராமரிப்பு வசதிகள் உட்பட அனைத்து மருத்துவமனைகளின் தீ பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள குழுக்களை அமைக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரேத அரசுகளை சுப்ரீம் கோர்ட் கேட்டு கொண்டது.
மேலும் ஏப்ரல் முதல் தொடர்ச்சியாக பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை வழங்குவதற்கான வழிகாட்டுதலை வகுக்க அல்லது ஒரு நெறிமுறையை வகுக்குமாறு மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டது. இந்த விவகாரம் குறித்து இரண்டு நாட்களுக்குள் மத்திய அரசு முடிவெடுக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.