ஹத்ராஸ் பாதிக்கபட்ட பெண்ணின் கிராமத்திற்கு சீல் உறவினர்களின் போன்கள் பறிமுதல் பத்திரிகையாளர்களை சந்திக்க தடை

ஹத்ராஸ் பாதிக்கபட்ட பெண்ணின் கிராமத்திற்கு போலீசார் சீல்வைத்து உள்ளனர். உறவினர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யபட்டு அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-10-03 01:55 GMT
லக்னோ: 

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான ஒரு தலித் இளம்பெண், சமீபத்தில் உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலையும் போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

இந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரிய போராட்டங்கள் வெடித்தன. தேசிய தலைநகரில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். 

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு வெள்ளிக்கிழமை உயர் போலீஸ் அதிகாரிகளின்  அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு ஹத்ராஸ்மாவட்ட போலீஸ்சூப்பிரெண்டு விக்ராந்த் வீர்மற்றும் நான்கு உள்ளூர் போலீஸ் அதிகாரிகளை  இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டது.

எஸ்பி மற்றும் டிஎஸ்பியிடம் நர்கோ பாலிகிராஃப் சோதனைகளும் நடத்தப்படும் என்று உபி முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) வழக்கைக் கையாள்வதில் ஈடுபட்டுள்ள அனைத்து போலீஸ்காரர்களுக்கும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் பாலிகிராஃபிக் மற்றும் நர்கோ சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
பூல்கரி கிராமத்தில் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் காவல்துறையினரை சந்தித்து அறிக்கைகளை பதிவு செய்த பின்னர், எஸ்ஐடி தனது முதல் கட்ட அறிக்கையை வெள்ளிக்கிழமை பரிந்துரைகளுடன் சமர்ப்பித்தது.

சில ஊடக அறிக்கைகள், சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) வழக்கைக் கையாள்வதில் ஈடுபட்டுள்ள அனைத்து போலீஸ்காரர்களுக்கும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் பாலிகிராஃபிக் மற்றும் நர்கோ சோதனைக்கு பரிந்துரை செய்துள்ளது. பூல்கரி கிராமத்தில் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் காவல்துறையினரை சந்தித்து அறிக்கைகளை பதிவு செய்த பின்னர், எஸ்ஐடி தனது ஆரம்ப அறிக்கையை வெள்ளிக்கிழமை பரிந்துரைகளுடன் சமர்ப்பித்தது.

பாதிக்கப்பட்டவரின் கிராமம் போலீசாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.ஊடகவியலாளர்கள் கிராமத்திற்குள் நுழைவதையும் குடும்பத்தினரை சந்திப்பதையும் தடுக்கின்றனர். பாதிக்கப்பட்டவரின் உறவினர்களின் தொலைபேசிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2012 டிசம்பரில் டெல்லியில் ஓடும் பஸ்ஸில்  ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயாவின் வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா இந்த வழக்கை ஏற்றுக்கொண்டார். 

சீமா குஷ்வாஹா கூறும் போது "கும்பலால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் குடும்பத்தினர் என்னை ஹத்ராஸுக்கு அழைத்துள்ளனர், ஏனெனில் நான் அவர்களின் சட்ட ஆலோசகராக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினரை வியாழக்கிழமை அவர் சந்திக்க முயன்றார்; ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர்.

மேலும் செய்திகள்