கோவாவில் இன்று 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-21 15:58 GMT
பனாஜி,

கோவா மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,027 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 88 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,449 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,552 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 26 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் இன்று 2,837 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 1,11,296 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கோவா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்