டெல்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்தது

டெல்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

Update: 2020-05-24 18:17 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.  நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1, 37,828 ஐ எட்டுகிறது; பலி எண்ணிக்கை மே 24 நிலவரப்படி 4,015 ஆக உள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில்  டெல்லியில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்தது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 508 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,418 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்ததையடுத்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது.

பாதிப்பு எண்ணிக்கையைப் பொருத்தவரை இந்தியாவில் டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாகவே தினமும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வருவதாக டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 87 ஆக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் தளர்வு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்