மராட்டியத்தில் மேலும் 790 பேருக்கு கொரோனா தொற்று

மராட்டியத்தில் மேலும் 790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-02 15:37 GMT
மும்பை,

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள ஆட்கொல்லி கொரோனா மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பை, புனே நகரங்களில் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. கடந்த மார்ச் 9-ந் தேதி தான் முதல் முதலில் மராட்டியத்தில், புனேயை சேர்ந்த தம்பதிக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து 50 நாட்களில் இங்கு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியிருந்தது.

இன்று ஒரே நாளில் மாநிலத்தில் புதிதாக 790  பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.. தற்போது மாநிலத்தில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 296 ஆக உயர்ந்து இருக்கிறது. இதேபோல மாநிலத்தில் மேலும் 36 பேர் ஆட்கொல்லி வைரசுக்கு பலி ஆகி உள்ளனர். இதனால் இங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 521 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை மாநிலத்தில் 2000 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்