பழிவாங்கும் அரசியலை கைவிட்டு பொருளாதாரத்தை சீராக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் யோசனை
பொருளாதார மந்தநிலை ஆழ்ந்த கவலை அளிக்கிறது. பழிவாங்கும் அரசியலை கைவிட்டு, பொருளாதாரத்தை சீராக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் யோசனை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாட்டின் பொருளாதார மந்தநிலை ஆழ்ந்த கவலை அளிக்கிறது. கடந்த காலாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5 சதவீதம் என்பது நீண்டகால மந்தநிலையின் பிடியில் நாம் சிக்கி இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக, உற்பத்தி துறை வளர்ச்சி விகிதம் 0.6 சதவீதமாக இருப்பது பெரிதும் மன உளைச்சலை அளிக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அவசரகதியில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. போன்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிழைகளில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்தியா, நல்ல வளர்ச்சியை காணக்கூடிய திறன் பெற்ற நாடு. ஆனால், மோடி அரசு அனைத்து மட்டங்களிலும் தவறான நிர்வாகத்தை கையாண்டதால் இந்த மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர், நலிந்த பிரிவினர் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனங்கள் அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அவற்றின் தன்னாட்சி அதிகாரம் சீரழிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பெறப்பட்டுள்ளது. இதற்கு பிறகு ரிசர்வ் வங்கி மீண்டு எழுமா என்பது இனிமேல்தான் தெரியும்.
நுகர்வோர் வளர்ச்சி விகிதம், 18 மாத காலங்களில் மிகவும் குறைவாக உள்ளது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. வரி வருவாயில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறிய, பெரிய தொழிலதிபர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். வரி பயங்கரவாதம் நீடிக்கிறது. முதலீட்டாளர்கள் மனநிலை உற்சாகமின்றி இருக்கிறது. இவையெல்லாம் பொருளாதார மீட்புக்கு உகந்தவை அல்ல.
ஆட்டோமொபைல் துறையில் மூன்றரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். அமைப்புசாரா துறைகளிலும் வேலையிழப்பு கணிசமாக ஏற்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அதனால் கிராமப்புற வருவாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. மோடி அரசு பெருமையாக கூறும் குறைவான பணவீக்க விகிதம், விவசாயிகளை பலிகொடுத்துத்தான் கிடைத்துள்ளது.
பட்ஜெட் அறிவிப்புகள், சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அசைத்து விட்டன. உலக வர்த்தகத்தில் எழுந்துள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், ஏற்றுமதியை அதிகரிக்கும் நிலையில் இந்தியா இல்லை. இதுதான் மோடி அரசின் பொருளாதார நிர்வாகத்தின் நிலை.
இந்தியா இதே பாதையில் தொடர்ந்து செல்வதை அனுமதிக்க முடியாது.
ஆகவே, பழிவாங்கும் அரசியலை கைவிட்டு, விவேகமான, சிந்திக்கும் திறனுள்ள நபர்களை அணுகி, மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த சீரழிவில் இருந்து பொருளாதாரத்தை மீட்டு எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மன்மோகன் சிங் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.