கடந்த 5 வருடங்களில் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறைக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு

கடந்த 5 வருடங்களில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-07-16 13:42 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.  மோடி மீண்டும் 2வது முறையாக பிரதமரானார்.  அவரது அமைச்சரவை சகாக்களும் முறைப்படி பதவியேற்றனர்.  இதில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான மத்திய மந்திரியாக நிதின் கட்காரி பொறுப்பேற்று கொண்டார்.

அவர் இன்று மக்களவையில் பேசும்பொழுது, 2019-20ம் ஆண்டுக்கான சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான மானிய கோரிக்கைகளுக்கு மக்களவை ஒப்புதல் வழங்கி உள்ளது.  கடந்த 5 வருடங்களில் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான பணிகளுக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்